சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்



 சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கொடிக்கு பூஜை செய்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கண்ணன் பட்டர், அர்ச்சகர் சண்முகம் பூஜை செய்தனர். நிர்வாக அலுவலர் ராஜா, கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்