அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை பெருவிழா



அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை பெருவிழா மற்றும் அப்பர் சுவாமிகளின் திருப்பதிகங்கள் முற்றோதுதல், பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை பெருவிழா,அப்பர் சுவாமிகளின் திருப்பதிகங்கள் முற்றோதுதல் மற்றும் பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி, கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில் நடைபெற்றது. திருமுறை கண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பண்ணிசையோடு திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவார திருப்பதிகங்கள் முற்றோதுதல் நடைபெற்றது. திருஞானசம்பந்த பெருமான் சுவாமிகள் புறப்பாடு மற்றும் பெருமானோடு கலத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்