கமுதி: கமுதி புனித அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் கடந்த 300 ஆண்டுகள் பழமையானதாகவும். இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறும் வழக்கம். நடப்பாண்டில் தேர் திருவிழா முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.இதனை முன்னிட்டு கிராமத்தில் முக்கிய வீதிகளில் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.பின்பு கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லூயிஸ் கொடியை ஏற்றினார்.சிறப்பு திருப்பலி நடந்தது. ஜூன் 12ல் கமுதி முக்கிய வீதிகளில் தேர் வீதிஉலா, ஜுன் 13ல் அந்தோணியார், சவேரியார் தெருவில் தேர் வீதிஉலா, ஜூன் 14ல் கர்த்தநாதசாமி நினைவு அசன வைபவம் நடைபெறுகிறது.கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பரத உறவின்முறையினர் செய்தனர்.