வரசித்தி விநாயகர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு



பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோயிலில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜூன், 2ம் தேதி குரு பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, அலங்காரங்கள், ஹோமங்கள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்