நடுவீரப்பட்டு: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் வரும் 5 ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கடந்த மே, 13 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று 1 ம் தேதி, கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அன்றைய நாள் முதல் தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வரும், 5 ம் தேதி காலை சுவாமி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. வரும் 6 ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.