பக்தர்கள் தங்கும் விடுதிகள் முடக்கம்; ரூ.,20 கோடி மக்கள் வரிப்பணம் வீண் ?



வடலூரில் சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை அமைந்துள்ள பகுதியில் தங்கி, ஏறக்குறைய ஆயிரம் பேர் தினசரி அன்னதானம் பெற்று ஜீவித்து வருகின்றனர். முதியோர், ஆதரவற்றோர் என இவர்கள் தருமச்சாலை அருகே உள்ள மண்டபம், பெருவெளி பகுதியில் உள்ள மர நிழல் ஆகியவற்றில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் கிடையாது. வடலூர் பெருவெளியில் கடந்த தி.மு.க., ஆட்சியில் சர்வதேச மையம் அமைக்க திட்டமிட்டு ரூ.,99 கோடி ஒதுக்கியதாக அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து பெருவெளியில் சத்திய ஞான சபை செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கின. சன்மார்க்கர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், வள்ளலாருக்கு பெருவெளிக்காக நிலம் கொடுத்த பார்வதிபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் வரை சென்று பணிகள் முடங்கின. திட்டத்தின் ஒரு பகுதியாக சைட் - பி எனும் பெயரில், வடலூர் சிப்காட் அருகே பக்தர்கள் தங்கும் விடுதி, சித்த வைத்திய சாலை உள்ளிட்ட பெயர்களில் ரூ.,20 கோடி மதிப்பில், 10 கட்டடங்கள் கட்டப்பட்டன. தி.மு.க., ஆட்சி இறுதி காலத்தில் காணொளி மூலம் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பணிகள் முடிந்த கட்டடங்கள் பூட்டு போடப்பட்டன. பக்தர்கள் தங்குவதற்காக பல கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டதாக கூறும் இந்த கட்டடங்கள் மூடப்பட்டும், பக்தர்கள் மரத்தடியில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஆங்காங்கே தங்குவதுமாக நிலைமை இருந்து வருகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சன்மார்க்கர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது : தி.மு.க., ஆட்சியில் அனைவர் எதிர்ப்பையும் மீறி சர்வதேச மையம் என்ற பெயரில் வடலூர் பெருவெளி சிதைக்கப்பட்டது. சைட் - பி என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அறநிலையத்துறையை சீர் செய்யும் த.வெ.க புதிய அமைச்சர் இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும். தி.மு.க., ஆட்சியில் நன்றாக இருந்த பல்வேறு கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டன. அவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டு போடப்பட்டு முடங்கி உள்ளன. அதேபோல பக்தர்களுக்காக என கட்டப்பட்ட வடலூர் சைட் - பி கட்டடங்களும் முடங்கிக் கிடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்