தட்சிண கன்னடா மாவட்டம், ‘துளுநாடு’ என்றும் அழைக்கப்படுகிறது. துளு நாடு என்பது கோவில்களின் வீடு என்று அர்த்தம். இங்கு கோவில்கள் இல்லாத கிராமமே இல்லை என்று சொல்லலாம். இக்கோவில்கள், தங்களை காப்பதாக கிராமத்தினர் நம்புகின்றனர்.
அதுபோன்று ஷிபரூர் கிராமத்திலும் புகழ் பெற்ற பசுமையான ஸ்ரீ கோதமணிட்டாய கோவிலும் உள்ளது. சிவனும், பார்வதியும் வனப்பகுதியில் உலாவி கொண்டிருந்தனர். அப்போது துர்கா தேவயிடம் இருந்து கண்ணுக்கு புலப்படாத சக்தி ஒன்று வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சக்தியை, உள்ளூர் மக்கள், மந்திரவாதி உதவியுடன் ஒரு கும்பத்தில் அடைத்து, மகாவீர் கங்கை நதியில் மிதக்க விட்டனர்.
கும்ப காந்தினி பெரிஞ்சேயின் ஜெயின் மன்னர் ஒருவர், இந்த கும்பத்தை கண்டெடுத்து, அதை திறந்தபோது, தெய்வம் தோன்றியது. அந்த தெய்வத்திற்கு ‘கும்ப காந்தினி’ என்று பெயரிடப்பட்டது. அதன் பின் ‘கோதமணிதாய சுவாமி கோவில்’ கட்டப்பட்டது.
இங்கு வரும் பக்தர்கள், இறைவனை பிரார்த்திப்பதோடு, இங்குள்ள தீர்த்த கிணற்று நீரையும் அருந்துகின்றனர். இந்த கிணற்று நீர் சாதாரண நீரல்ல. உயிரை காக்கும் சஞ்சீவினியாகும்.
இதன் மூலம் விஷமுள்ள விலங்கு ஏதேனும் தங்களை கடித்தால், இந்த கிணற்று நீரை அருந்தி, இங்கிருக்கும் மண்ணை பிரசாதமாக தங்கள் நெற்றியில் இட்டு கொண்டால், விஷம் நீங்கி உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து நீங்கிவிடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ‘திபார்’ எனும் திருவிழா நடக்கிறது. இவ்விழாவின் போது, மாநிலத்தில் பகுதிகளில் வசிக்கும் துளு மொழி பேசும் மக்கள் வருகின்றனர். அன்றைய தினம், கிணற்று நீரை, தங்கள் வீட்டுக்கு எடுத்து செல்வர்.
மூன்று கற்கள் இப்பகுதியில் வசித்து வந்த நாட்டு வைத்தியர் தியம்பண்ணா ஷெட்டி. உலக மக்கள் நன்மைக்காக, தன்னிடம் இருந்த விஷத்தை உறிஞ்சும் மூன்று கல் கற்களை, இந்த கிணற்றில் வைத்தார். அன்று முதல் கிணற்று நீரால், எந்த வகையான விஷத்தையும் உறிஞ்ச முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
இன்றும் கூட இப்பகுதி மக்கள், விஷ ஜந்துகள் கடித்தால், அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில்லை. இந்த கிணற்று நீரை குடித்து, மண்ணை விலங்கு கடித்த இடத்தில் தடவினால் குணமாவதாக நம்புகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காகவே, இக்கோவில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.