விதியை வெல்லும் சக்தி எது என்று கூறுகிறார் பாரதியார்



* நடந்ததை எண்ணி வருந்தாதே. நடக்கப் போவதை நினைத்து மயங்காதே. விதியை வெல்லும் சக்தி பக்திக்கு உண்டு.
* உன்னை நீயே திருத்திக் கொண்டு உண்மையின் பாதையில் செல்.
* உழைத்து வாழ்வதில்தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.
* நல்ல சிந்தனையால் மனம், உடல் பலம் பெறுகிறது.
* அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அதுவே உலக இயக்கத்தின் ஆதாரம்.
* உண்மையை உயிராக போற்று. உண்மை பேசுபவர்கள் உயர்வாக மதிக்கப்படுவர்.
* பிறருக்கு துன்பம் தருவது பாவம். இதுவே இன்பத்தைக் கொடுத்தால் புண்ணியம்.
* மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. தண்டனைக்கு ஆளாவாய்.  
* துணிவு இருந்தால் துன்பம் அணுகாது. கல்வி, செல்வம், வீரம் என எல்லாம் துணிவால் பெறலாம்.    
* படிப்படியான வளர்ச்சியே நிலைக்கும். வேகமான வளர்ச்சி வந்த வேகத்தில் படுத்து விடும்.
* எப்போதும் மலர்ந்த முகத்துடன் செயல்பட்டால் எல்லாம் இனிதாகும்.
* பயம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. எனவே பயத்தை கைவிடு. தைரியமாக செயல்படு.  
* தர்மத்தின் பாதையில் நீ சென்றால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்