வாழ்வு வளம் பெற என்ன செய்யவேண்டும்: சொல்கிறார் வள்ளலார்



* எண்ணம், சொல், செயலை ஒன்றாக்கு. வாழ்வு வளம் பெறும்.
* நல்லவர்களின் மனதை புண்படுத்தாதே. அவர்களை நடுங்கச்செய்யாதே.  
* பிறர் தான, தர்மம் செய்வதை தடுக்காதே. மீறி தடுத்தால் அது பாவத்திற்கு சமம்.
* பசித்தவருக்கு உணவு கொடு. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாய்.  
* எந்த உயிர்களையும் துன்புறுத்தாதே. இதுவே நீ விரதம் இருப்பதற்கு சமம்.
* உன்னிடம் யார் வந்து உதவி கேட்டாலும் தயங்காமல் செய்.
* உண்மையை பேசு. உன் மரியாதை தானாகவே உயரும்.
* நல்லதை உடனே செய். அதற்கான பலன் நிச்சயம் பெறுவாய்.
* பிறர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படாதே. அதுதான் நல்லது.
* கோபம், பொய், பொறாமை, கடுஞ்சொற்களை தவிர்த்திடு.  
* எதற்கும் பயப்படாதே. அதற்காக எதற்கும் பயமில்லாமல் இருக்காதே.
* கடவுள் மீது நம்பிக்கை வைத்து செய்யும் செயல் வெற்றியாகும்.   
* அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.
* தினமும் கடவுளை வணங்கு. மனம் அமைதியாக இருக்கும்.
* பிறரிடம் உயர்வு, தாழ்வு பார்க்காமல் பழகு.  
* மந்திரம் சொன்னால் மட்டும் போதாது. கடவுளின் திருவடியில் உனது மனம்
ஒன்ற வேண்டும்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்