நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதியிலும் சஷ்டி பூஜை நடந்தது.