திருப்புல்லாணி அருகே கிராம கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்



திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட கட்டையன் பேரன் வளைவு கிராமத்தில் 51 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவு ஆண்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. நேற்று மூலவர் முத்துமாரியம்மன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டனர். மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊரணியில் பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை கட்டையன் பேரன் வளைவு கிராம பொதுமக்கள் மற்றும் முத்தரையர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


* சின்னாண்டி வலசை ஊராட்சிக்குட்பட்ட தோரையன் வலசை செட்டித்தோட்டம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று அம்மன் கரகம் முன்னே செல்ல நேர்த்திக்கடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்