திருநெல்வேலி குற்றாலநாதர் கோவிலில் கட்டண தரிசனம் வாபஸ்



தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி அருகேயுள்ள பழமையான குற்றாலநாதர் சுவாமி கோவிலில், பக்தர்களின் வசதிக்காக ரூ.50 சிறப்பு தரிசனக் கட்டணம் அறிமுகப்படுத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக பக்தர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது.


இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணியினர் கோவில் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில், தென்காசி தி.மு.க. எம்.எல்.ஏ. கலைகதிரவன் கேட்டுக்கொண்டதன் பேரில், ரூ.50 சிறப்பு தரிசனக் கட்டணத் திட்டம் கைவிடப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்