சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாஷ ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு யாகவேள்வி நடத்தப்பட்டு வடுக பைரவருக்கு அபிஷேகங்கள், வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் வடுகபைரவருக்கும், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் காலபைரவருக்கும் கிராம மக்கள் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.