கோவை; கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் 2026ம் ஆண்டு 14 வது பிரம்மோற்சவம் இன்று 08ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. இதில் ஒருவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவில் 11ம் தேதி காலை 06.33மணி முதல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தலும், 12ம் தேதி காலை 8 மணி முதல் திருமஞ்சனம், தீர்த்தவாரி, த்வாதச ஆராதனம் புஷ்பயாஹம் சப்தாவர்ணம் த்வஜ அவரோஹணம். (கொடியிறக்கம்) மஹா கும்பப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.