கட்டிக்குளம் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார திருவிழா; பக்தர்கள் தரிசனம்



மானாமதுரை: ச மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் முதலாவது ஜீவ ஒடுக்கம் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆடி மாதம் அவதார திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று நடைபெற்ற 169 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.பின்னர் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து பூஜைகள் நடைபெற்ற பின்னர் சுவாமிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பனேந்தல் மட நிர்வாகிகள், கட்டிக்குளம் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர். இரவு கட்டிக்குளம் கிராமத்தில் சுவாமி வீதி உலாவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்