கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமை சிறப்பாக சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி இந்திலி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமையொட்டி, சுவாமிக்கு இன்று காலை 10:30 மணிக்கு வாசணை திரவியங்களால் மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா குருக்கள் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.