ஆடி பவுர்ணமி; தஞ்சை பெரியகோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென் கைலாய வலம்



தஞ்சை; ஆடி பௌர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென் கைலாய வலம் வந்தனர்.


ஆடி மாத பெளர்ணமி  முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து தென் கைலாய வலம் தொடங்கியது, நாதஸ்வர இசை, மிகப் பெரிய ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து செல்ல அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக்கோவில் தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு வலம் வந்து வழிபட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்