கங்காதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பாலாபிஷேகம்



சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு, ஏராளமான பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.



மகா சிவராத்திரியான இன்று (மார.,4) சென்னை உட்பட தமிழகத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகிறது. சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்பதால் பலரும் தங்கள் கைகளாலே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். கோவிலில் தனியாக அமைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்களே வில்வம் இலையுடன், பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கங்காதீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்