கரடிக்கல் மலை மீது உள்ள சுந்தரராஜபெருமாள் கோயிலுக்கு படிக்கட்டு பக்தர்கள் எதிர்பார்ப்பு



திருமங்கலம்:கரடிக்கல் மலை மீது உள்ள சுந்தரராஜபெருமாள் கோயில் பழமைவாய்ந்தது. இங்கு செல்ல 60 டிகிரி சாய்வு தளத்தில் 100 அடி உயரம் வரை மலையேற வேண்டும்.

கரடிக்கல் மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங் களில் இருந்து இங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவில் பல ஆயிரம் பேர் பங்கேற்பர். இவர்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த சிரமப்படுகின்றனர்.

உற்சவர் சிலைகள் கொண்டு வருவது, பூஜை பொருட்கள் கொண்டு செல்வது அனைத்தும் சிரமமாக உள்ளது. எனவே மலையை சேதப்படுத்தாமல் சிமென்ட் செங்கல் பயன்படுத்தி கோயிலுக்கு படிக்கட்டுகளும், பக்கவாட்டில் கம்பி தடுப்புகளும் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்