சபரிமலையில் நெரிசல் இல்லா தரிசனம்

ஜனவரி 10,2020



சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் நேற்று, பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்தனர்.மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, சபரிமலை நடை, டிச.30 மாலை திறந்தது. அன்று முதல் பக்தர் கூட்டம் அலைமோதியது. சிறு இடைவெளி கூட இல்லாமல், பெரிய நடைப்பந்தலில் வரிசை காணப்பட்டது.

பம்பை, நிலக்கல்லில், பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். ஆறு மணி நேரம் முதல், 12 மணி நேரம் வரை, பக்தர்கள் காத்திருந்தனர்.இதற்கு, நேற்று காலை இடைவேளை வந்தது. பெரிய நடைப்பந்தலில் நேற்று, வரிசை இல்லை. பக்தர்கள் நேரடியாக படியேறி, நெரிசல் இன்றி தரிசனம் செய்தனர்.மகரஜோதிக்கு, ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன.

கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரபிரசாத் கூறியதாவது:அப்பம், அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசன இடங்களில் தடுப்புவேலி அமைக்கும் பணி துவங்கியுள்ளது. கூடாரம் அமைத்து தங்கும் பக்தர்கள், சமையல் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக, கூடுதல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.போலீஸ் அதிகாரி, எஸ்.சுஜித்தாஸ் கூறியதாவது:ஜோதி தரிசனம் முடிந்து, மலை இறங்கும் பக்தர்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நிதானமாக, இருக்க வேண்டும்.

பக்தர்கள் இறங்கும், 108 படி, பெய்லி பாலம், மாளிகைப்புறம் பாதை போன்ற இடங்களில் கூடுதல் போலீசாரும், மத்திய அதிவிரைவு படையினரும் நிறுத்தப்படுவர். மகரஜோதி நாளில் மதியம், நடை அடைக்கப்பட்ட பின், பக்தர்கள் படியேற முடியாது என்பதால், பம்பையில் தடுக்கப்படுவர். ஜோதி தரிசனம் முடிந்து, பக்தர்கள் நெரிசல் குறைந்த பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்