திருச்செந்துாரில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்



திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளான நேற்று கடற்கரையில் உள்ள கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெ ய்வானை ஆகியோருக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருச்செந்துார் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி் யாகசாலை பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாகசாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல் பாட மேளதாளத்துடன் சண்முக விலாசத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டிமண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கோயிலில் கிரிப்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மறுநாள் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கு கடற்கரையில் கம்புகளால் தடுப்பு அரண் அமைக்கும் பணிகள் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து வருகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்