திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜீயர் பிரம்மரத வீதி உலா



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் பிரம்மரதத்தில் வீதி உலா நடந்தது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசீக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத விழா நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ பூஜைகள், ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 9:00 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது‌. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்