உடுமலை; உடுமலை அருகேயுள்ள பாலப்பம்பட்டி, ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. இதனை முன்னிட்டு, கடந்த, 10ம் தேதி, தெய்வகுளத்திலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், பெரிய விநாயகர் கோவிலிலிருந்து திரு ஆபரணம் மற்றும் தீர்த்தம் அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கணபதி ஹோமம், புண்யாகம், கும்பஸ்தாபனம், காயத்திரி யாகம், நிறை வேள்வி, தீபாராதனை, மாலை, கலாசபிஷேகம், சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றம் பறவைக்காவடி ஊர்வலம் நடந்தது.