சபரிமலையில் நெய்பிஷேகம் இன்று நிறைவு நாளை இரவு குருதி பூஜை

ஜனவரி 18,2023



சபரிமலை: சபரிமலையில் இ்ன்றுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது நாளை இரவு மாளிகைப்புறத்தில் குருதி பூஜையுடன் பக்தர்களின் தரிசனமும் நிறைவு பெறும். சபரிமலையில் 14-ம் தேதி மகரஜோதி தரிசனத்துக்கு பின்னரும் பக்தர்களின் தரிசனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தினமும் இரவு மாளிகைப்புறத்தில் இருந்து ஐயப்பன் 18 படிகளின் முன்னால் எழுந்தருளினார். இன்று ஐயப்பன் சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது மகரவிவளக்கு காலத்தில் கடந்த டிச, 31-ம் தேதி தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று காலை 11:00 மணிக்கு நிறைவு பெறும். தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் சந்தனம் பூஜிக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும் நாளை நடை திறந்து பக்தர்களின் தரிசனம் நடைபெற்றாலும் நெய்யபிஷேகம் கிடையாது. நாளை இரவு 10:00 மணிக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் நடத்த முடியாது, தொடர்ந்து மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பந்தளம் மன்னர் குடும்பத்தில் மூதாட்டி இறந்ததால் கோயில் சாவி ஒப்படைப்பு உள்ளிட்ட சடங்குகள் இந்த ஆண்டு நடைபெறாது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்