ஈரோடு : தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா வரும் மார்ச் 20ம்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 20 ம்தேதி இரவு பூச்சாட்டுதல், மார்ச்.28ம்தேதி இரவு திருக்கம்பம் சாட்டுதல், ஏப்ரல் 3ல் குண்டம் திருவிழா, ஏப்ரல் 4ல் அதிகாலை குண்டம் இறங்குதல், ஏப்ரல் 5ல் திருவிளக்கு பூஜை, ஏப்ரல் 6ல்,மஞ்சள் நீராட்டு விழா, ஏப்.7ல் தங்கத்தேர் புறப்பாடு ஏப்ரல் 10ல் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.