பரமக்குடி; பரமக்குடி சின்ன கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் 44ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. சித்திரை மாத தமிழ் புத்தாண்டு விழாவில் காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்து அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பாண்டிச்சேரி பூத கன இசை குழுவினரின் சிவ கயிலாய வாத்திய இசை முழங்க சிவன் பார்வதி நடன நிகழ்வு நடந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வீதி வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு ஊர்வலம் கோயிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூக்கள் பரப்பப்பட்டது. இன்று காலை 10:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.