திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்



சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நின்ற நாராயண பெருமாள், செங்கமலத் தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி அலங்காரத்தில் சிம்ம, சேஷ, கருட, யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 9 ம் நாள் திருவிழாவான தேரோட்டம் ஜூலை 5 ல் நடைபெறும்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்