முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலுக்கு நகர் தேவர் உறவின் முறை சார்பாக பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.மறவர் தெருவில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் பொங்கல் பெட்டியை அரசு மருத்துவமனை,பஸ் ஸ்டாண்ட்,காந்திசிலை வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக தூக்கி சென்றனர்.பின்பு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.மூலவரான செல்லிஅம்மனுக்கு பால், சந்தனம்,பன்னீர், திரவிய பொடி உட்பட் 21 வகையான அபிஷேகம் நடந்தது. முளைக்கட்டு திண்ணையில் இருந்து முக்கிய விதிகளில் முளைப்பாரி தூக்கி கொண்டு வந்து ஊருணியில் கரைத்தனர்.