டிசம்பர் 01,2023
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலையில் அதிகாலையிலேயே சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதியது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல கால உற்சவம் நடந்து வருகிறது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சன்னிதானத்தில் இருந்து சபரி பீடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களில், தமிழக பக்தர்களும் கணிசமான இருந்தனர். அதிக பக்தர்கள் திரண்டதால், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு கூட்டம் கூட்டமாக பக்தர்கள் அனுப்பப்பட்டனர். பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர தேவசம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.