டிசம்பர் 01,2023
ஈரோடு மாவட்டம் பவானி பி.மேட்டுப்பாளையத்தில் அனந்தசாகரம் எரிக்கரையில் உள்ளது அய்யனாரப்பன் சாஸ்தா கோயில். இங்கு சாஸ்தா வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் இந்த அய்யனாரை வழிபட்டால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம். பிரகாரத்தில் முன்னுடையான், வீரகாரகன், தன்னாசியப்பர், மகாமுனி, சாந்தமுனி ஆகியோர் வடக்கு நோக்கி உள்ளனர். இவர்களுக்கு எதிரே பாம்பட்டி சித்தர், கோமாதா, ஐய்யனாரப்பனின் வாகனமாக குதிரைகளின் சுதைச் சிற்பங்கள் அழகாக காட்சி தருகின்றன.
இங்கு வெள்ளிதோறும் வாக்கு கேட்கும் நிகழ்ச்சியும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் பொங்கல் திருவிழாவும் நடக்கிறது. திருவிழாவில் அய்யனாருக்கு சர்க்கரை, பச்சரிசி, சர்க்கரை வள்ளி கிழங்கு, மொச்சைப்பயிறு வைத்து பச்சை பூஜை நடக்கிறது. இங்கு முன்னுடையான் சாமிக்கே (கருப்புசாமி) கிடாய் வெட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். கோயில் முன் முன்னுடையான், புடவைக்காரி அம்மனுக்கு படையலிட்டு வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது: பவானி – கவுந்தப்பாடி சாலை வழியாக 18 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 10:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 94435 63557, 97881 03068