டிசம்பர் 01,2023
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலையில் அதிகாலையிலேயே சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சன்னிதானத்தில் இருந்து பல மணி நேரம் காத்திருந்து ஸ்ரீ கோயில் வந்ததும் பக்தர்கள் எழுப்பும் சரணகோஷம் விண்ணை பிளக்கிறது. அவ்வாறு இன்று இருமுடி ஏந்தி, ஸ்ரீ கோயில் முன் கைகளை மேல் கூப்பி, ஐயப்பனை மனம் உருகி வேண்டிய சிறு வயது பக்தரின் பரவசம் அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க செய்தது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர தேவசம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.