டிசம்பர் 02,2023
சிவபெருமானுக்கும், மோகினிக்கும் பிறந்தவர் சாஸ்தா என்னும் அய்யனார். இவர் செங்கோல் ஏந்திய கோலத்தில் சென்னை ஆழ்வார் திருநகர் கோயிலில் பூர்ணா, புஷ்கலாவுடன் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்தால் ஒளிமயமான வாழ்வு அமையும். இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றடுக்கு கொண்டது. இவருக்கு ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடைபெறும்.
இந்த ஆண்டு டிச. 27, 28, 29 ல் நடக்கிறது. அன்னதானமும் உண்டு.
சென்னை வடபழநி - வளசரவாக்கம் இடையே ஆழ்வார்திருநகர் உள்ளது.
நேரம்: 6:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 95661 31009, 95661 84801