சபரிமலையில் 18ம் படியிலிருந்து நேரடியாக பக்தர்கள் மூலவரை தரிசிக்க திட்டம்

நவம்பர் 19,2024



சபரிமலை; சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

தற்போது 18 படி ஏறி வரும் பக்தர்கள் இடது பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அதிலும் நேரடியாக பார்க்காமல் வலதுபுறம் திரும்பி, சில வினாடிகள் மட்டுமே தரிசிக்க முடியும். கூட்ட நேரத்தில் போலீசார் பக்தர்களை தள்ளி விடும்போது பலருக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையும் இருக்கிறது.

இதை தவிர்த்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை ஏற்று 18 படியேறி வரும் பக்தர்களை, கொடி மரத்தின் பக்கவாட்டில் நேரடியாக கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்குவாசலில் நுழைந்ததுமே மூலவர் தெரிவார். பக்தர்கள் கூடுதல் நேரம் மூலவரை தரிசிக்க முடியும். தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னதியின் பின்புறம் வழியாக உள்ள பாலத்தில் மாளிகை புறம் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து பெய்லி பாலம் வழியாக பம்பைக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதற்கான சாத்தியம் குறித்து ஆய்வு நடத்தினார். சோதனை அடிப்படையில் இந்த மாற்றத்தை அமல்படுத்தி பார்த்த பின்னர் கேரள உயர்நீதிமன்றம், அரசு, மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்