சோடா குடிக்க கூடாது, நிறைய சாப்பிடக்கூடாது; சபரிமலை மலையேறும் பக்தர்களுக்கு டாக்டர்கள் யோசனை

நவம்பர் 30,2024



சபரிமலை; மலையேறும் பக்தர்கள வயிறு நிறைய சாப்பிடக்கூடாது, தண்ணீர் தாகத்துக்கு சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாலை அணிந்து விரதமிருக்கும் போது ஊரில் நடை பயிற்சி உள்ளிட்ட வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பம்பையில் இருந்து மலை ஏறும் போது மெதுவாக வர வேண்டும். வழக்கத்தை விட அதிகமான உடல் தளர்ச்சி இருப்பதாக கருதினால் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்து மலையற வேண்டும். தேவைப்பட்டால் பக்தர்கள் நடக்கும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் பாலர்களை பயன்படுத்த வேண்டும். பம்பையில் இருந்து மலையேறுவதற்கு முன் வயிறு நிறைய சாப்பிடாமல், லைட் ஃபுட் எடுக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்தால் சோடா போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து சுடுநீர் குடிக்க வேண்டும். மலை ஏற தொடங்கும் முன்னர் உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால் பம்பை அரசு மருத்துவமனையில் டாக்டர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.


வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்வதோடு, அந்த மருந்துகளுக்கான சீட்டுகளையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படும் போது அதற்கேற்றார் போல் தண்ணீரும் குடிக்க வேண்டும். பாம்பு கடிக்கும் நிலை ஏற்பட்டால் உடலை குலுக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு கடித்த இடத்தை கத்தி அல்லது பிளேடால் கீறி பெரிதாக்க கூடாது. கடியேற்ற பகுதியை முறுக்கி கட்டவும் கூடாது. இது ஆபத்தாகும். கடியேற்ற பகுதியை உயரமான இடத்தில் வைப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக மருத்துவ கட்டுப்பாட்டு அறை 04735 202032 என்ற எண்ணுக்கு அழைத்து இருக்கும் இடம், சூழ்நிலை போன்ற விபரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் அதன் பக்கத்தில் உள்ள மருத்துவ மையத்திலிருந்து ஊழியர்கள் வந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்டஉதவி செய்வார்கள். விபரம் உடனடியாக சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கே டாக்டர்கள் தயாராக இருப்பார்கள். சபரிமலை மருத்துவ சேவை ஹாட்லைன் உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக சன்னிதானம் மருத்துவ கட்டுப்பாடு அதிகாரி டாக்டர் கே. கே.சியாம் குமார் கூறினார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்