திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை, 13ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்றப்படுகிறது. மறுநாள், 14 ம் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி திதி, மாலை, 4:17 முதல், 15 ம் தேதி மதியம், 3:13 வரை உள்ளதால், அந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.