சபரிமலையில் புதிய பஸ்ம குளம் தேவசம்போர்டு தீவிரம்

டிசம்பர் 20,2024



சபரிமலை; சபரிமலையில் பக்தர்களுக்காக புதிய பஸ்மகுளம் அமைகிறது. இதற்காக சன்னிதானத்தின் முன்புறம் தேங்காய் உலர் மையத்தின் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சபரிமலை பயணத்துடன் தொடர்புடையது பஸ்மகுளம். இது தற்போது சன்னிதானத்தின் பின்புறம் அமைந்துள்ளது. அங்க பிரதட்சணம் நடத்தும் பக்தர்கள் இந்த குளத்தில் குளித்து ஈர உடையுடன் வந்து அந்த நேர்த்திக் கடனை செலுத்துவர். அதுபோல சபரிமலை பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பக்தர்கள் இந்த பஸ்ம குளத்தில் குளிக்கின்றனர். சன்னிதானத்தின் பின்புறம் தாழ்வான பகுதியில் இந்த குளம் அமைந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இங்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் இந்த குளத்தின் அருகே தான் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து குளத்தை வேறு இடத்துக்கு மாற்ற தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக சன்னிதானத்தின் முன்புறம் தேங்காய் உலர் மையத்தின் அருகே உள்ள கல் மண்டபத்தை ஒட்டி குளம் அமைக்க தேவசம்போர்டு இடம் தேர்வு செய்துள்ளது.


தனியார் நிறுவனம் உபயமாக செய்து கொடுக்க உள்ளது. எனவே பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாஸ்டர் பிளானிலும் உட்படுத்தப்பட்டுள்ளதால் வேறு பிரச்னைகள் இருக்காது என்று தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் இந்த பகுதியில் குளம் அமையும் போது கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மாஸ்டர் பிளானில் உள்ள திட்டத்தை போலீசார் எதிர்க்க முடியாது என்று தேவசம்போர்டு தலைவர் பி .எஸ் .பிரசாந்த் கூறியுள்ளார். தனியாக ‘டிவி’ சேனல் தொடங்குவது பற்றியும் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்