வடமதுரை; வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐயப்பன் கோயில் கட்டப்படுகிறது. இங்குள்ள தற்காலிக மணிமண்டபத்தில் 5 ஆண்டுகளாக வழிபாடு நடத்துக்கின்றனர். மஞ்சமாதா காப்பு கட்டுதலுடன் துவங்கிய மண்டல பூஜை விழாவில், கணபதி பூஜை, சீர், சந்தன குடம் கொண்டு வருதல், பூர்ணத்தம்மன், புஷ்கலையம்மனுடன் சாஸ்தா திருக்கல்யாணம், விளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல் என வழிபாடுகள் நடந்தன. நேற்று சப்தகன்னிமார் திருவிளக்கு ஏந்தி பூஜை செய்த பின்னர் கன்னிசாமிகள் திருஆபரண பெட்டிகளை சுமந்தபடி ஊர்வலமாக உள்ளூர் கோயில்களுக்கு சென்றனர். பால்கேணி மேட்டில் ஐயப்பனுக்கு தீர்த்தவாரி, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏற்பாட்டினை தலைமை குருசாமிகள் ராமதாஸ், ராமசாமி, பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை தலைவர் பிரபு, துணைத்தலைவர் சவுந்தரம், செயலாளர் சந்திரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தனர்.