மாயாண்டி சித்தர் பீடத்தில் 18ம் ஆண்டு குருபூஜை விழா



சிவகங்கை; சிவகங்கை அருகே இடையமேலுாரில் மாயாண்டி சித்தர் பீடத்தில் 18ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், கோமாதா பூஜையுடன் துவங்கியது. காலை 11:00 மணிக்கு அபிேஷகம், 12:00 மணிக்கு அன்னதானம், மதியம் 3:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, பொங்கல் விழா, மாலை 6:00 மணிக்கு பாரதி இசை கல்விக்கூட கலைநிகழ்ச்சி நடந்தது. நாளை காலை 6:00 மணிக்கு பால்குடம், 8:00 மணிக்கு திருவாசகம் ஓதுதல், 10:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 11:00 மணிக்கு தீபாராதனை, மகேஸ்வர பூஜை, மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், 3:00 மணிக்கு அதீபன் நாட்டியாலயா கலைநிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு சுவாமி நகர்வலத்துடன் நிகழ்ச்சி முடிகிறது.  மாயாண்டி சித்தர் அறக்கட்டளை, அக்னி மகரிஷி சற்குரு மகான் மாயாண்டி சுவாமி அன்னதான குழு குருபூஜை விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.  


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்