காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்யவும், கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்கவும் வருகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 30 நாட்களில் கோயிலுக்கு வந்து பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பற்றிய விவரங்களை கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர் அவை; தங்கம் 73 கிராம், வெள்ளி 478 கிலோ 550 கிராம், இந்திய கரன்சி நோட்டுகள் ரூ.170,80,619 ரூ, இந்திய நாணயங்கள் ரூ.594714 மொத்த ரொக்கப் பணம் ரூ.1,76,75,333 இருந்தது. மேலும் அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து என 186 வெளிநாட்டு பணம் இருந்ததாக கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தெரிவித்தார்.