சேலம்; உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா வரும், 18ல் துவங்கி பிப்., 26 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்காக, கேரள மாநிலம், திருவனந்தபுரம் வடக்கு–பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருவனந்தபுரம் வடக்கு–பனாரஸ் ரயில் பிப்.,18, 25ல் செவ்வாய்க்கிழமைகளில் திருவனந்தபுரம் வடக்கு ஸ்டேஷனில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை பனாரஸை, இரவு, 9:50 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்கிறது. மறுமார்க்கமாக பனாரஸ்–திருவனந்தபுரம் வடக்கு ரயில் பிப்., 21, 28ல் வெள்ளிக்கிழமைகளில் பனாரஸில் இருந்து மாலை, 6:05 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவனந்தபுரம் வடக்கு ஸ்டேஷனுக்கு இரவு, 11:55 மணிக்கு சென்றடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.