வாராகி அம்மனுக்கு பஞ்சமி மகா அபிஷேகம்; தேங்காய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு



கும்பகோணம்; பிரசித்தி பெற்ற பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு பஞ்சமி  மகா அபிஷேக வழிபாடு நடைபெற்றது. பெண்கள் தேங்காய், நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.  இங்கு தனி கோவில் கொண்டு சிம் ஹாருட வாராகி அம்மன் அருள் பாலிக்கிறார். பஞ்சமி தினமான இன்று சிம்ஹாருட வாராகி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், சிறப்பு ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் வாழை இலையில் பச்சரிசி, வெல்லம், பழங்கள், தேங்காய் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்