அவிநாசி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்



அவிநாசி; அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரையப்பாளையத்தில் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 1ம் தேதி கோவில் வளாகத்தில் பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு கொடியேற்றுதல், சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை அம்மை அழைத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்காட்டு பாளையம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். விழாவில், இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது. ஊர் மக்கள் மற்றும் கோவில் விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்