கிருத்திகை வழிபாடு; சந்தனகாப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர்



விருத்தாசலம்; கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு இன்று காலை 9:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகள் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்