அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ 5ம் நாள் விழா; சுவாமி மாட வீதி உலா



திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான  மார்கழி மாதத்தில், உத்திராயண  புண்ணியகால பிரம்மோற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி  பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, இரவு சுவாமி மாடவீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். இன்று ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 14ம் தேதி தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடைகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்