மயிலாடுதுறை; சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் வலது பாத தரிசனம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரு விக்ரம நாராயண பெருமாள் எனப்படும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாரு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். 108 திவ்ய தேசத்தில் 24வது திவ்ய தேசமாக இக்கோவிலில் மூலவர் திரு விக்ரம நாராயணப் பெருமாள் வலது பாதத்தை ஆண்டு தோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடியும். பெருமாளின் வலது பாதத்தில் அருகே ஒரு அடி உயரத்தில் தவிட்டு தாடாளன் பெருமாளையும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் மூலவர் வலது பாதம் மற்றும் தவிட்டு தாடாளன் பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் தாடாளன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு சாத்துமுறை நடைபெற்றது தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சொர்க்கவாசல் வழியே பெருமாள் எழுந்தருள கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் தொடர்ந்து பெருமாள் கோவிலை பலம் வந்து வசந்த மண்டபம் எழுந்துருவினர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் உலகளந்த பெருமாளின் வலது பாத தரிசனம் கண்டு பிரார்த்தனை செய்தனர் பூஜைகளை பத்ரிநாத் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தார். இதே போல இன்று காலை மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில், கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவில், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் மற்றும் திருநாங்கூர் திவ்ய கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.