மாவூற்று வேலப்பர் கோவிலில் தை அமாவாசை விழா; பக்தர்கள் குவிந்தனர்



ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் தை அமாவாசை விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபட்டனர். மாவூற்று வேலப்பருக்கு பல்வேறு அபிஷேகங்கள், சந்தனகாப்பு அலங்காரம் செய்திருந்தனர். பக்தர்கள் பலர் மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். காவல் தெய்வம் கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆண்டிப்பட்டி சார்ந்துள்ள கிராமங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து நூற்றுக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் வந்து சென்றனர். கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி இருந்தது. ராஜதானி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், புனித நீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்தனர். துளசி மாலை, வடை மாலை சுவாமிக்கு அணிவித்தனர். ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டிபட்டி மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்