மாணவர்களுக்காக திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை



உடுமலை; உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை இன்று நடந்தது.


அரசு பொதுத்தேர்வுகளான, 10 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை, 6:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்கின. தஞ்சாவூர் சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் துவக்கி வைத்தார். இன்று காலை, யாக சாலை நிறைவு பூஜையும், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, புனித நீர் மற்றும் பல்வேறு திரவியங்களில்  சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள, 23 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, உடுமலை திருப்பதி, ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்