உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் 4ம் தேதி காலை 9:00 முதல் 10:20 மணிக்குள் நடக்க உள்ளது. கடந்த மார்ச் 31 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து ஆறு கால பூஜை விமர்சையாக நடந்து வரும் வேளையில் நேற்று இரவு 11:30 மணிக்கு மரகத நடராஜரின் திருமேனியில் சாற்றப்பட்ட சந்தனம் படி களையப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை இருப்பிட கலச பூஜையுடன் வேதமந்திரங்கள் முழங்க 300-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள் குருக்கள் ஹோம வேள்விகளை வளர்த்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அரங்கில் வேத விற்பன்னர்கள் திருமுறை பாராயணம் பாடினர். தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.