பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், சீதாராம ஆஞ்சநேய சுவாமி தேவஸ்தானத்தில், ராமநவமி ரதோற்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சியும், கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேய சுவாமி தேவஸ்தானம் மற்றும் ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில், ராமநவமி ரதோற்சவ விழா கடந்த, 30ம் தேதி மஹாகணபதி ேஹாமத்துடன் துவங்கியது. வரும், 9ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேற்று காலை, ேஹாம பூஜைகள், வேதபாராயணமும், காலை, 9:00 மணிக்கு கருட கம்பத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.