வால்பாறை; வால்பாறையில் உள்ள, முருகன் கோவில்களில் சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி மாத சஷ்டி பூஜை இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டி பூஜையான இன்று சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.